ADDED : ஜூன் 07, 2024 01:05 AM

தொண்டாமுத்துார்;தொண்டாமுத்துார் வட்டாரத்தில் சாரல் மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் உருவானது.
தொண்டாமுத்துார் வட்டாரப்பகுதி, மூன்று புறமும் மேற்கு தொடர்ச்சி மலையை அரணாக கொண்டுள்ளது. இப்பகுதியில், கடந்த, 1ம் தேதி, தென்மேற்கு பருவ மழை துவங்கியது. கடந்த இரு நாட்களாக, மழை பெய்யாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், பகல், 12:30 மணிக்கு, தொண்டாமுத்துார் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால், தொண்டாமுத்துார் வட்டார பகுதியில், நேற்று பகல் முதல் மாலை வரை குளிர்ச்சியான சூழல் உருவானது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.