Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ADDED : ஜூலை 21, 2024 01:04 AM


Google News
Latest Tamil News

முப்பெரும் விழா


தெலுகு பிராமண சேவா சமிதி சார்பில், முப்பெரும் விழா நடக்கிறது. வடகோவை, குஜராத் சமாஜ் பவனில், காலை, 5:00 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வயது முதிர்ந்த சமூகத்தினருக்கு சதாபிஷேகம்,மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல், விருது வழங்கும் விழா, மாநில மாநாடு ஆகிய நிகழ்வுகள் நடக்கின்றன.

திருத்தேர்த் திருவிழா


அன்னுார், குப்பனுார், கருப்பராயன் கலாமணி சுவாமி கோவிலில், திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் உற்சவத் திருவிழா நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை திருக்கல்யாணம், சுவாமி அழைத்தல், நேர்த்திக் கடன், அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

குருபூர்ணிமா விழா


போத்தனுார் - ஈச்சனாரி ரோட்டில் அமைந்துள்ள யோக சாயிபாபா கோவிலில், குருபூர்ணிமா விழா நடக்கிறது. காலை, 5:30 முதல் மதியம், 12:00 மணி வரை, கணபதி ஹோமம், ஆரத்தி, சாய் பஜன், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை, ஆரத்தி, நடனாஞ்சலி, திருக்கோயில் வலம் வருதல், ஆரத்தி நடக்கிறது.

சத்யநாராயண பூஜை


ராம்நகர், கோதண்ட ராமசுவாமி தேவஸ்தானத்தில், ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி அன்று, சத்யநாராயண பூஜை நடக்கிறது. அதன்படி, இன்று, மாலை, 6:30 மணிக்கு, கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், சத்யநாராயண பூஜை நடக்கிறது.

குரு வணக்க நாள்


சரவணம்பட்டி, கவுமார மடாலயத்தில், குரு வணக்க நாள் விழா நடக்கிறது. காலை, 7:00 முதல் மாலை, 4:00 மணி வரை, குருமூகூர்த்தம் வழிபாடு, திருக்கோவில் வழிபாடு, சந்நிதானங்களின் ஆசியுரை, வள்ளிக்கும்மி, தேவார, திருப்புகழ் இசை உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.

குரு பூர்ணிமா


கவுண்டம்பாளையம் அருகே, நல்லாம்பாளையத்தில் உள்ள கோவை மாதா அமிர்தானந்தமயி மடத்தில், குரு பூர்ணிமா நடக்கிறது. பிரம்மஸ்தான ஆலயத்தில் காலை, 9:00 மணிக்கு குருபாத பூஜையும், காலை, 10:00 மணிக்கு, குரு ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, சொற்பொழிவு, பஜனை மற்றும் தியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கோவை புத்தகத் திருவிழா


கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து, கோயமுத்துார் புத்தகத் திருவிழா நடத்துகின்றன. காலை 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். காலை, 11:00 மணிக்கு கவியரங்கமும், மாலை, 6:30 மணிக்கு, இன்னிசையில் சங்கத் தமிழ் பாடல்கள் நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருக்குறள் பயிலரங்கு


திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், 'திருக்குறள் பார்வையில் செயல்திட்டங்களில் நடைமுறைக்கான வழிமுறைகள்' என்ற தலைப்பில், பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட்,சுவாமி விவேகானந்தர் இல்ல பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிலரங்கு நடக்கிறது.

ஆண்டு விழா


டி.டி.ஆர்., வெங்கட்ரமணன் டிரஸ்ட் சார்பில், 11ம் ஆண்டு விழா நடக்கிறது. இதில், 50 மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள், ஆயிரத்து 250 பேருக்கு, சீருடை வழங்கப்படுகிறது. தடாகம் ரோடு, இடையர்பாளையம், வி.ஆர்.ஜி., திருமண மஹாலில், காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது.

விழிப்புணர்வு சிறப்புரை


சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. சூலுார், முத்துக்கவுண்டன்புதுார், சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில், மாலை, 6:00 மணி முதல் நிகழ்ச்சி நடக்கிறது. 'நாம் கடைபிடிக்கும் சம்பிரதாயங்களில் மறைந்திருக்கும் அறிவியல் பின்னணி' என்ற தலைப்பில், சிறப்புரை நடக்கிறது.

சுயமுன்னேற்ற பயிலரங்கு


கோவை திருப்புமுனை அமைப்பு சார்பில், 'மாற்றம் எனும் மாயை' எனும் தலைப்பில், சுயமுன்னேற்ற பயிலரங்கம் நடக்கிறது. பி.என்.புதுார், அறிவுத்திருகோவிலில், காலை, 10:30 முதல் மதியம், 12:45 மணி வரை, இலவசப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மரக்கன்று நடும் விழா


செயல் சமூக செயற்பாட்டுக் களம் அமைப்பின் சார்பில், வேலாண்டி பாளையம் மற்றும் கோவில்மேடு பகுதியில், 12 முதல் 15 அடி வரை வளர்ந்த அரசு, வேப்ப மரக் கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 50 மரக்கன்றுகள், இன்று, காலை, 9:30 மணிக்கு, கோவில்மேடு மாநகராட்சி பள்ளி அருகில் நடப்படவுள்ளன.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us