Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ADDED : ஜூலை 14, 2024 01:03 AM


Google News
Latest Tamil News

சுதர்சன ஜெயந்தி உற்சவம்


சவுரிபாளையம், ராஜீவ்காந்தி நகர், ராஜகணபதி விநாயகர் கோவிலில், சுதர்சன ஜெயந்தி உற்சவம் நடக்கிறது. காலை, 8:00 மணி முதல் சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி, சடாரி தீர்த்த பிரசாத கோஷ்டி நடக்கிறது. மாலை, 6:00 மணி முதல், சக்கரத்தாழ்வார் சன்னதி புறப்பாடு, 17 கலச திருமஞ்சனம், சாற்றுமுறை, சடாரி தீர்த்த பிரசாத கோஷ்டி நடக்கிறது.

மஹோத்சவ விழா


அன்னுார், ஸ்ரீ தேவி, பூதேவி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர மகோற்சவ திருவிழா நடக்கிறது. மாலை, 4:30 மணி முதல், விஸ்வக்சேனர் பூஜை, சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி திருமஞ்சனம், மகா தீபாராதனை, சுவாமி உட்பிரகார புறப்பாடு, சாற்றுமுறை ஆகியவை நடக்கிறது.

உற்சவத் திருவிழா


ஸ்ரீ சக்தி முனியப்பன் கருப்பராயன் கோவில், 24ம் ஆண்டு உற்சவத்திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இதில், மாலை, 6:00 மணிக்கு, மறுபூஜை, அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

காமராஜர் பிறந்தநாள்


கல்வி துணை அறக்கட்டளை சார்பில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது. பச்சாபாளையம், பேரூர், திருவள்ளுவர் நகரிலுள்ள அறக்கட்டளையின் கல்வி அரங்கத்தில் காலை, 10:00 மணிக்கு விழா துவங்குகிறது.

பூச் பார்ட்டி


அளவில்லா அன்பை கொட்டிக்கொடுக்கும், நம்ம செல்லப்பிராணிகளை குஷிப்படுத்தும் பூச் பார்ட்டி நிகழ்ச்சி, மாதம்பட்டி சி.எஸ்.ஆர்.,ரிசார்ட்டில், இன்று நடக்கிறது. இதில், செல்லப்பிராணிகளுக்கு பேஷன் பரேடு, அடாப்டிங் டிரைவ், பயிற்சி வகுப்புகள், விளையாட்டுகள், என பல்வேறு நிகழ்வுகள் காலை, 9:30 முதல், மாலை, 6:30 மணி வரை நடக்கிறது.

மறைமலையடிகள் பிறந்தநாள்


உலகத் தமிழ் நெறிக்கழகம் சார்பில், தமிழறிஞர் மறைமலையடிகள் பிறந்தநாள் விழா நடக்கிறது. ரயில்நிலையம் எதிரில், அண்ணாமலை அரங்கத்தில், காலை, 9:30 மணிக்கு விழா நடக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள் பலர், நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

ஒயிலாட்ட அரங்கேற்றம்


கருமத்தம்பட்டி, சங்கமம் கலைக்குழுவின் 80வது ஒயிலாட்ட அரங்கேற்றம் இன்று நடக்கிறது. நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர் ரோடு, ஸ்ரீ ராம் நகரில், மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.

களப்பணி


கவுசிகா நீர்க்கரங்கள் மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பு சார்பில்,களப்பணி நடக்கிறது. அக்ரஹார சாமக்குளம் ஏரியில், காலை, 7:00 முதல் 9:00 மணி வரை நடக்கும் களப்பணியில், ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us