
சங்கீத உபன்யாசம்
பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில், 'விஷ்ணு சஹஸ்ரநாம மஹிமா' என்ற தலைப்பில், சங்கீத உபன்யாசம் நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில், மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. கலைமாமணி விசாக ஹரி உபன்யாசம் நிகழ்த்துகிறார்.
திருமஞ்சன அபிஷேகம்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பகவான் ஜெகன்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியருக்கு திருமஞ்சன சேவை நடக்கிறது. கொடிசியா அருகேவுள்ள இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலில், காலை முதல் விமர்சையாக நடக்கிறது.
இலக்கியச் சந்திப்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில், 250வது இலக்கியச் சந்திப்பு நடக்கிறது. 'எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம்' என்ற தலைப்பில், எழுத்தாளர்கள் பேசுகின்றனர். பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'வளமான வாழ்க்கைக்கு மனதின் கட்டமைப்பு' என்ற தலைப்பில், நேரடிப் பயிலரங்கம் நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், காலை, 11:00 முதல் 12:30 மணி வரை பயிலரங்கு நடக்கிறது.
தொல்காப்பியர் அறிவுடைமை
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் பேரூராதினம் சார்பில் இலக்கியச் சந்திப்பு, பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லுாரியில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. 'தொல்காப்பியர் காட்டும் அறிவுடைமை' என்ற தலைப்பில், சிறப்புரை மற்றும் 'அறிவுடைமைக்குப் பெரிதும் துணை நிற்பது கல்வியே, கேள்வியே' என்ற தலைப்பில், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.
ஸ்டைல் பஜார் கண்காட்சி
டிரெண்டிங் அப்டேட்டுடன் வந்துவிட்டது, 'ஸ்டைல் பஜார்' ஷாப்பிங் கண்காட்சி. இதில், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என நாடு முழுவதுமுள்ள முன்னணி டிசைனர்கள்,தங்களின் தனித்துவமிக்க டிசைனர் மற்றும் லைப்ஸ்டைல் பேஷன் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். ரேஸ்கோர்ஸ், தாஜ் விவாந்தா ஓட்டலில், காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை, கண்காட்சி நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.
இயற்கை மருத்துவ முகாம்
சேவா பாரதி கோவை மாநகர் தென்தமிழ்நாடு மற்றும் நவக்கரை, ஜே.எஸ்.எஸ்., இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இணைந்து, மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாமை நடத்துகின்றன. ஆர்.எஸ்.புரத்தில், சத்குரு சேவாஸ்ரமத்தில், காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, மருத்துவ முகாம் நடக்கிறது.
திட்ட துவக்க விழா
ரோட்ராக்ட் கிளப் ஆப் கோவை கேலக்சி சார்பில், 'பெட்டிக்கடை' எனும் திட்டம் துவங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் சிறப்புத் திறனாளிகளின் தன்னம்பிக்கை, வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சிறிய வணிகம் ஏற்படுத்தி தரப்படுகிறது. சூலுார் ஹவுசிங் யூனிட்டில், காலை, 10:00 மணிக்கு திட்ட துவக்க விழா நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.