Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வருடாந்திர கணக்கு தாக்கலுக்கு இன்றே கடைசி! உணவு நிறுவனங்களுக்கு அழைப்பு

வருடாந்திர கணக்கு தாக்கலுக்கு இன்றே கடைசி! உணவு நிறுவனங்களுக்கு அழைப்பு

வருடாந்திர கணக்கு தாக்கலுக்கு இன்றே கடைசி! உணவு நிறுவனங்களுக்கு அழைப்பு

வருடாந்திர கணக்கு தாக்கலுக்கு இன்றே கடைசி! உணவு நிறுவனங்களுக்கு அழைப்பு

ADDED : ஜூன் 30, 2024 02:47 AM


Google News
Latest Tamil News
கோவை;உணவு பாதுகாப்புத்துறையில், வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்காத உணவு நிறுவனங்கள், இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் படியும், கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறையின் வாயிலாக அனைத்து வகையான உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள், பால் உற்பத்தி நிறுவனங்கள், மறுபொட்டலமிடுபவர் ஆகியோர் தங்களது நிறுவனத்தின் வருடாந்திர கணக்கு அறிக்கையை, 'foscos' என்ற இணையதள வழியாக, ஜூன் 30க்குள் (இன்று) மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, அத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கோவை மாவட்டத்தில், 2023-24ம் ஆண்டிற்கான வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்க வேண்டிய மொத்த நிறுவனங்கள், 2660 ஆகும். கணக்கு தாக்கல் செய்யத் தவறிய நிறுவனங்களும், சென்ற 2023-2024ம் வருடத்தில் தயாரிப்பு தொழில் புரிந்து, இப்போது வணிகம் நடைபெறவில்லை என்றாலும், வருடாந்திர கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம்.

உணவு வணிகர்கள் உடனடியாக, தங்களது வருடாந்திர கணக்கை தாக்கல் செய்து, தங்களது பழைய உரிம எண்ணினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஜூன் 30ம் தேதிக்குப் பின், சமர்ப்பிக்கப்படும் வருடாந்திர கணக்கு அறிக்கைக்கு அபராத தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அல்லது தங்களது ஒரு வருட உரிமத்தின் தொகையில், 5 மடங்கு வரை அபராதமாக விதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அனைத்து வகையான உணவு தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தின் வருடாந்திர கணக்கு அறிக்கையினை, தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் புதுப்பிக்க முடியாது

நிறுவனத்தின் வருடாந்திர கணக்கு அறிக்கை சமர்ப்பிக்காத நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்படும். தவறும் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க இயலாது. அதே பழைய உரிம எண் தங்களுக்கு கிடைக்க பெறாமல்,அதன் பின் தங்கள் அனைத்து பொட்டலங்கள், பேக்கிங் பொருட்கள், மூட்டைகளிலும் பழைய உணவு பாதுகாப்பு (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) உரிம எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். விபரங்களுக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை தொலைபேசி, 0422 2220922 என்ற எண்ணிலும், தங்கள் பகுதியின் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களையும் தொடர்பு கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us