/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புகையிலை பாதிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புகையிலை பாதிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புகையிலை பாதிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புகையிலை பாதிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புகையிலை பாதிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 03, 2024 12:23 AM

ஆனைமலை;ஆனைமலையில், புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆனைமலை அருகே பெரியபோது வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொது சுகாதாரத்துறை சார்பில், புகையிலை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் தீமைகள் குறித்து டாக்டர் கிருத்திகா, மக்களிடம் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, டாக்டர் சீதாலட்சுமி, ஆயுர்வேத டாக்டர் சிவதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் அருணாச்சலம், கோகுல், சரத் மற்றும் சண்முகபிரியன், சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, புகையிலை எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லதுரை செய்து இருந்தார். ஆனைமலை பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் சார்பில், புகையிலை போதை ஒழிப்பு பட விளக்க கண்காட்சி, நா.மூ., சுங்கத்தில் நடந்தது.
ஆல்வா குழும தலைவர் டாக்டர் ஆல்வா, அங்கலகுறிச்சி ஊராட்சித்தலைவர் திருஞானசம்பத்குமார், நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
போதை, புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது. தியானத்தின் வாயிலாக இந்த பழக்கத்தில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.