/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'நாளை கஷ்டப்படாமல் இருக்க இன்று கஷ்டப்பட வேண்டும்' 'நாளை கஷ்டப்படாமல் இருக்க இன்று கஷ்டப்பட வேண்டும்'
'நாளை கஷ்டப்படாமல் இருக்க இன்று கஷ்டப்பட வேண்டும்'
'நாளை கஷ்டப்படாமல் இருக்க இன்று கஷ்டப்பட வேண்டும்'
'நாளை கஷ்டப்படாமல் இருக்க இன்று கஷ்டப்பட வேண்டும்'
ADDED : ஜூலை 27, 2024 12:40 AM

மேட்டுப்பாளையம்;''கஷ்டப்படாமல் இருக்க இன்று கஷ்டப்பட வேண்டும், என, சச்சிதானந்த பள்ளி செயலர் கவிதாசன் பேசினார்.
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உலக புத்தக தினத்தை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோர் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மைதான பார்வையாளர் அரங்கில், 750 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமர்ந்து புத்தகங்கள் வாசித்தனர். புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் கவிதாசன் தலைமை வகித்து பேசுகையில், உங்களுடைய படிப்பு, வாழ்க்கைக்கு எந்த அளவு பயன்படுகிறது என்பதை நீங்கள் தீர்மானித்து, அதற்கு தகுந்தாற் போல் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நாளை கஷ்டப்படாமல் இருக்க, இன்று ஒவ்வொருவரும் கஷ்டப்பட வேண்டும்'என்றார் .
கோவை புத்தகத் திருவிழா துணைத் தலைவர் ராஜேஷ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார். புத்தகங்கள் வாசிப்பின் அனுபவத்தை மாணவ, மாணவியர் பகிர்ந்து கொண்டனர்.