/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அறிவு சார் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு அறிவு சார் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு
அறிவு சார் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு
அறிவு சார் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு
அறிவு சார் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு
ADDED : ஜூன் 07, 2024 11:29 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அறிவுசார் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4க்கான மாதிரி தேர்வு நடந்தது.
இதில், 30க்கும் மேற்பட்டவர்கள், பங்கேற்று மாதிரி தேர்வு எழுதினர். தற்போதைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் கேட்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா செய்திருந்தார்.
இதுகுறித்து பயிற்சி ஆசிரியர்கள் கூறியதாவது: அறிவு சார் மையத்தில், வேலை வாய்ப்பு தேர்வுக்கான, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திறனாய்வு தேர்வு, ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
எனவே காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள, மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.