/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கருப்பராயன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கருப்பராயன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
கருப்பராயன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
கருப்பராயன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
கருப்பராயன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜூலை 21, 2024 12:45 AM
அன்னூர்;பிரசித்தி பெற்ற கருப்பராயன் கோவிலில், இன்று 108 கிடாய் வெட்டுதலும், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
அன்னூர் சிறுமுகை சாலையில், கைகாட்டி நகரில், கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவில் அருள்வாக்கு சொல்வதில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் திருவிழா, நேற்று முன்தினம் காலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. இரவு பக்தர்கள் கரகம் எடுத்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அலங்கார பூஜை நடந்தது.
நேற்று கருப்பராயனுக்கு, பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று (21ம் தேதி) காலை 10:00 மணிக்கு, கருப்பராயன் கருப்பழகி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மதியம் துவங்கி, மாலை வரை, அசைவ அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து, கருப்பராயன் கோவிலுக்கு இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.