/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பள்ளி இலவச சீருடை வழங்க தாமதம் ஏற்படுவது இதனால்தான்! அரசு பள்ளி இலவச சீருடை வழங்க தாமதம் ஏற்படுவது இதனால்தான்!
அரசு பள்ளி இலவச சீருடை வழங்க தாமதம் ஏற்படுவது இதனால்தான்!
அரசு பள்ளி இலவச சீருடை வழங்க தாமதம் ஏற்படுவது இதனால்தான்!
அரசு பள்ளி இலவச சீருடை வழங்க தாமதம் ஏற்படுவது இதனால்தான்!
ADDED : ஜூன் 24, 2024 12:37 AM
கோவை;அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள் புதிய சீருடை வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு நான்கு ஜோடி சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் பயிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, முதல் கட்டமாக இம்மாத இறுதிக்குள் ஒரு ஜோடி சீருடை வழங்கப்படவுள்ளது. சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நான்கு மாதங்களுக்கு, இரண்டு ஜோடி சீருடைகள் வீதம், இலவச சீருடை வழங்கப்படுகிறது.
''முன் வயது அடிப்படையில், சீருடை அளவுகளை கணித்து மொத்தமாக தைத்து வழங்கப்பட்டது.
''அதில் அளவு வித்தியாசம் அதிகமாக இந்ததால், இந்த முறை ஒவ்வொரு மாணவர்களுக்கும், தனித்தனியாக அளவு எடுத்து சீருடைகள் தைக்கப்படுகின்றன. அதனால் கால தாமதம் ஆகிறது.
''முதல் கட்டமாக, இந்த மாத இறுதிக்குள் ஒரு ஜோடியும், அடுத்த மாதம் ஒரு ஜோடியும் வழங்க இருக்கிறோம்' என்றனர்.