Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேர்தல் ஆணையத்துக்காக... காண்பித்தார்கள் கணக்கு! வேட்பாளர்கள் செய்த செலவு!

தேர்தல் ஆணையத்துக்காக... காண்பித்தார்கள் கணக்கு! வேட்பாளர்கள் செய்த செலவு!

தேர்தல் ஆணையத்துக்காக... காண்பித்தார்கள் கணக்கு! வேட்பாளர்கள் செய்த செலவு!

தேர்தல் ஆணையத்துக்காக... காண்பித்தார்கள் கணக்கு! வேட்பாளர்கள் செய்த செலவு!

ADDED : ஜூலை 06, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
கோவை:சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். கோவை தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், தங்களது செலவு கணக்கை, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கின்றனர். அதைப்பார்த்து, வாயடைத்து போய் விடாதீர்கள். அதெல்லாம்... ஆணைய உத்தரவுக்காக கொடுத்த கணக்கு மட்டுமே!

கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக, 95 லட்சம் ரூபாய் செலவிட வேண்டும்; மூன்று முறை கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்திருந்தது.

பொதுக்கூட்டத்துக்கு திரட்டப்படும் தொண்டர்களுக்கு உணவு வழங்குவது, நாற்காலி வசதி செய்து கொடுப்பது, வேன் வசதி செய்வது உள்ளிட்ட அனைத்து விதமான செலவுகளுக்கும், பிரத்யேகமாக விலை நிர்ணயித்தும் பட்டியல் வழங்கப்பட்டது.

இதன்படி, தொகை கணக்கிட்டு, செலவு பட்டியல் சமர்ப்பிக்க, வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அனைத்து வேட்பாளர்கள் சார்பில் செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, ஒருவர் வீதம் ஒரு லோக்சபா தொகுதிக்கு இரு 'அப்சர்வர்'கள் நியமிக்கப்பட்டு, வேட்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்த செலவு கணக்கு ஒத்திசைவு செய்யப்பட்டது. கோவை தொகுதிக்கு, செலவின பார்வையாளர்கள் கீது படோலியா, உம்மே பர்டினா அடில் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது.

அக்கணக்குகள் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தேர்தல் களத்தில் முக்கியமான வேட்பாளர்களாக கருதப்பட்ட இந்நான்கு பேரும், இவ்வளவு ரூபாய் தான் செலவழித்தார்களா அல்லது அதற்கு மேலும் செலவழித்தார்களா என்பது, வாக்காளர்களாகிய பொதுமக்களுக்கு நன்கு தெரியும்.

எல்லை தொடாத செலவு!

அண்ணாமலை(பா.ஜ.,) : ரூ.89 லட்சத்து, 33 ஆயிரத்து, 590கணபதி ராஜ்குமார்(தி.மு.க.,) : ரூ. 93 லட்சத்து, 53 ஆயிரத்து, 565சிங்கை ராமச்சந்திரன்(அ.தி.மு.க.,) : ரூ. 86 லட்சத்து, 66 ஆயிரத்து, 960கலாமணி(நாம் தமிழர்) : ரூ. 58 லட்சத்து, 44 ஆயிரத்து, 789







      Our Apps Available On




      Dinamalar

      Follow us