/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டி முடித்து மூன்று மாதமாகியும் இணைப்பு வழங்காத குடிநீர் தொட்டி கட்டி முடித்து மூன்று மாதமாகியும் இணைப்பு வழங்காத குடிநீர் தொட்டி
கட்டி முடித்து மூன்று மாதமாகியும் இணைப்பு வழங்காத குடிநீர் தொட்டி
கட்டி முடித்து மூன்று மாதமாகியும் இணைப்பு வழங்காத குடிநீர் தொட்டி
கட்டி முடித்து மூன்று மாதமாகியும் இணைப்பு வழங்காத குடிநீர் தொட்டி
ADDED : ஜூலை 23, 2024 01:56 AM

மேட்டுப்பாளையம்:கட்டி முடித்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் குழாய் இணைப்பு வழங்காத நிலமட்டத் தொட்டியால், போதிய குடிநீர் வழங்க முடியவில்லை.
சிறுமுகை அருகே இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேயான் நகரில், 350 குடும்பங்கள் உள்ளன. மூலையூரில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீரை எடுத்து, அதை சுத்தம் செய்து, ஆறு ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் வறட்சியான காலத்தில் குடிநீர் விநியோகம் செய்தது போலவே, தற்போது ஆறு நாட்களுக்கு ஒரு முறை ரேயான் நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து ரேயான் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், தலைவர் சின்னையன், இலுப்பநத்தம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவர் ரங்கசாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்ற போதும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே உடனடியாக கட்டி முடித்த நிலமட்ட தொட்டியில், தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி, போராட்டம் செய்வோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதுகுறித்து இலுப்பநத்தம் ஊராட்சி தலைவர் ரங்கசாமியிடம் கேட்டபோது, ஊராட்சி நிதியின் சார்பில், 13 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் செலவில், ரேயான் நகரில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலமட்ட தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, கட்டி முடித்த நிலமட்ட தொட்டிக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும்படி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் குழாய் இணைப்பு வழங்கவில்லை. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உடனடியாக குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தலைவர் கூறினார்.