/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்
துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்
துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்
துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்
ADDED : ஜூலை 17, 2024 11:46 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் முதல் வளைவு அருகே மலைப்பாதை தடுப்பு சுவரில் கடந்த1ம் தேதி, இறையாண்மைக்கு எதிராக 'இந்தியா ஒழிக' என எழுதப்பட்டிருந்தது.
மேலும் பிரிவினையை தூண்டும் வகையில் இந்தியா நீட்டை திணிக்கிறது, தமிழ்நாடு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர். இச்சம்பவத்தில் மாவோயிஸ்ட்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து தற்போதுவிசாரணையை கியூ போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதியில் உள்ள சாலையோரம் தடுப்பு சுவரில் இரவு நேரத்தில் எழுதப்பட்டதாலும், அங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லாததாலும் போலீசார் துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம், காரமடை வனச்சரகம் அருகே உள்ள கேரள மாநில எல்லை பகுதிகள், குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதா என தீவிரமாக சோதனை மேற்கொண்டோம். அங்கு மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இல்லை.
அதே போல் அன்றைய தினம் மேட்டுப்பாளையம் கல்லார் இ-பாஸ் சோதனை சாவடி மற்றும் கோத்தகிரி சாலையில் உள்ள இ- பாஸ் சோதனை சாவடியில் சென்றவாகனங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை துப்பு எதுவும் கிடைக்கவில்லை, என்றனர்.