/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உங்க பேர்ல இருக்கற போன் இணைப்பு துண்டிக்கப்படும்: இப்படி அழைப்பு வந்தால் உஷார் மக்களே! உங்க பேர்ல இருக்கற போன் இணைப்பு துண்டிக்கப்படும்: இப்படி அழைப்பு வந்தால் உஷார் மக்களே!
உங்க பேர்ல இருக்கற போன் இணைப்பு துண்டிக்கப்படும்: இப்படி அழைப்பு வந்தால் உஷார் மக்களே!
உங்க பேர்ல இருக்கற போன் இணைப்பு துண்டிக்கப்படும்: இப்படி அழைப்பு வந்தால் உஷார் மக்களே!
உங்க பேர்ல இருக்கற போன் இணைப்பு துண்டிக்கப்படும்: இப்படி அழைப்பு வந்தால் உஷார் மக்களே!
ADDED : ஜூன் 15, 2024 11:45 PM
கோவை:;'அன்பான வாடிக்கையாளரே உங்கள் பெயரில் உள்ள அனைத்து மொபைல் இணைப்புகளும் இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஹிந்தியில் தொடர எண் 2ஐ அழுத்தவும். ஆங்கிலத்துக்கு எண் 1ஐ அழுத்தவும்' என, பதிவு செய்யப்பட்ட குரலில் அழைப்பு வந்தால் உஷார்.
இது ஒரு மோசடியான அழைப்பு!
பதிவு செய்யப்பட்ட குரலைத் தொடர்ந்து நீங்கள் ஹிந்தி அல்லது ஆங்கிலம் என ஏதாவது ஒரு மொழியைத் தேர்வு செய்து விவரங்களைக் கேட்க முயற்சி செய்தால், தொலைபேசித் துறையில் இருந்து பேசுவது போலவே பேசி, உங்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்பர்.
நீங்கள் அவர்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கினால், நீங்கள் உங்களின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடும்.
பதிவு செய்யப்பட்ட குரலுக்கு நீங்கள் எந்த எண்ணையும் அழுத்தி பதிலளிக்காவிட்டால், 44 நொடிகளில் அந்த அழைப்பு, தானாகவே துண்டிக்கப்பட்டு விடும்.
96549 09150 என்ற எண்ணில் இருந்து இதுபோன்ற ஒரு அழைப்பு வந்தது. ஆங்கிலத்தைத் தேர்வு செய்ததும், தொலைபேசி அலுவலகத்தில் இருந்து பேசுவதைப் போலவே பேசி, 'உங்கள் பெயர் என்ன' என்றனர்.
நாம் உஷாராகி, 'பெயர் தெரியாமல் எப்படி அழைத்தீர்கள்' எனக் கேட்டதற்கு, 'எங்களிடம் உங்களின் அனைத்து விவரங்களும் உள்ளன. சரிபார்ப்பை உறுதி செய்ய உங்களிடம் கேட்கிறோம்' என, பதில் வந்தது.
நமது அடுத்தடுத்த கேள்விகளால் உஷார் அடைந்த மோசடிப் பேர்வழி, தொடர்ந்து பேசியதை நிறுத்திவிட்டார். அதே சமயம் அழைப்பையும் துண்டிக்காமல் மவுனம் காத்தார். 30 நொடிகளுக்குப் பிறகு அழைப்பை நாமே துண்டித்தோம்.
இதுபோன்ற மோசடி அழைப்புகள் குறித்து, தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏற்கனவே எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. தற்போது மீண்டும் இதுபோன்ற அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற அழைப்புகள் வந்தால், அவற்றுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்து விடுவது உங்கள் பர்ஸுக்கு நல்லது.