ADDED : ஜூலை 19, 2024 11:03 PM
கோவை;கோவையை சேர்ந்த, 33 வயது பெண் ஒருவர் கணவருடன், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். அப்போது, அந்த பெண்ணின் வீட்டின் அருகே வசிக்கும் நகைப்பட்டறை தொழிலாளி நரசிம்மராஜ் அரசு,41, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் உல்லாசமாக இருந்ததை, நரசிம்மராஜ் அரசு தனது மொபைல் போனில், 'வீடியோ' எடுத்து வைத்துள்ளார்.
கடந்த 8ம் தேதி அந்த வீடியோவை, 'வாட்ஸ் அப்' ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். அப்பெண் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்க, நரசிம்மராஜ் அரசை கைது செய்தனர்.