Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலே நல்லி செட்டிபாளையம் மக்கள் சோகம்

ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலே நல்லி செட்டிபாளையம் மக்கள் சோகம்

ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலே நல்லி செட்டிபாளையம் மக்கள் சோகம்

ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலே நல்லி செட்டிபாளையம் மக்கள் சோகம்

ADDED : ஜூன் 11, 2024 11:15 PM


Google News
அன்னுார்:அத்திக்கடவு திட்டத்தில் நல்லி செட்டிபாளையம் குளத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட வராததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளம் குட்டைகளில் நீர் நிரப்ப, அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட பணிகள் கடந்த ஆண்டு முடிவடைந்தது.

2023 மார்ச் முதல் ஆறு நீரேற்று நிலையங்களின் வழியாக அன்னுார் வட்டாரத்தில் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட குளம், குட்டைகளில் சோதனை அடிப்படையில் நீர் விடப்படுகிறது. ஆனால் காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள நல்லி செட்டிபாளையம் மற்றும் மசாண்டி பாளையம் குளங்களுக்கு இது வரை ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை.

இதுகுறித்து நல்லி செட்டிபாளையம் மக்கள் கூறியதாவது :

எங்கள் பகுதியில், வாழை, நிலக்கடலை மற்றும் சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. 60 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்கள் ஊரில் உள்ள 16 ஏக்கர் குளம் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இக்குளத்தில் குழாய் பதிக்கப்பட்டு ஓ.எம்.எஸ்., கருவி பொருத்தப்பட்டு உள்ளது. சோதனை ஓட்டம் துவங்கி 15 மாதங்கள் ஆகி விட்டது. இதுவரை எங்கள் குளத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை.

அன்னுார், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட குளங்களுக்கு 40 முறைக்கு மேல் நீர் விட்டுள்ளனர். இதுகுறித்து குன்னத்தூராம் பாளையத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் உதவி பொறியாளர்களிடம் நேரடியாக தெரிவித்து உள்ளோம். கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. விரைவில் எங்கள் ஊர் குளத்திற்கு அத்திக்கடவு நீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.

இதேபோல் மசாண்டி பாளையம் குளத்திலும் இது வரை ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

அந்த குளத்திற்கு குழாய் பதிக்கும் பணி முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us