/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 4,525 போலீசார் பாதுகாப்பு தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 4,525 போலீசார் பாதுகாப்பு
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 4,525 போலீசார் பாதுகாப்பு
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 4,525 போலீசார் பாதுகாப்பு
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 4,525 போலீசார் பாதுகாப்பு
ADDED : ஜூன் 04, 2024 01:14 AM
கோவை;லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையையொட்டி கோவை மாவட்டத்தில், 4,525 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. கோவை தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தடாகம் ரோடு, அரசு தொழில்நுட்ப கல்லுாரியிலும், பொள்ளாச்சி தொகுதிக்கான இயந்திரங்கள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் 'சிசிடிவி' கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க, 4,525 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'கோவை தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், 1,000 பேரும், மாநகரின் முக்கிய இடங்களில், 1,500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொள்ளாச்சி மையத்தில், 1,425 பேரும் வெளியே முக்கிய இடங்களில், 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்' என்றனர்.