/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒருவருக்கு மனநலம் ரொம்ப முக்கியம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாரத்தான் ஒருவருக்கு மனநலம் ரொம்ப முக்கியம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாரத்தான்
ஒருவருக்கு மனநலம் ரொம்ப முக்கியம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாரத்தான்
ஒருவருக்கு மனநலம் ரொம்ப முக்கியம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாரத்தான்
ஒருவருக்கு மனநலம் ரொம்ப முக்கியம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாரத்தான்
ADDED : ஜூலை 22, 2024 02:37 AM

கோவை:தமிழ்நாடு, இந்திய மனநல மருத்துவ சங்கம் மற்றும் கொங்குநாடு மனநல அறக்கட்டளை சார்பில் மனநலம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
பொதுமக்களிடம் மன ஆரோக்கியம், மன அழுத்தம் மற்றும் மாணவர்களிடம் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நேற்று விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
இந்த மரத்தான் தொடர் ஓட்டம், கோவை நேரு ஸ்டேடியம் பகுதியில் துவங்கி, 3, 5 மற்றும், 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடந்தன.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார், 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் டி.ஜி.பி., டாக்டர் ரவி கலந்து கொண்டார்.
மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு மனநல சங்கத்தின் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம், இந்திய மருத்துவ சங்க கோவை கிளை தலைவர் டாக்டர் பிரியா, கொங்குநாடு மனநல அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பிரதீப் மற்றும் உறுப்பினர்கள் டாக்டர் ஸ்ரீனிவாசன், டாக்டர் வெங்கடேஷ்குமார், டாக்டர் மணி ஆகியோர் பரிசு தொகை மற்றும் கேடயங்களை வழங்கினர்.
இந்திய மனநல மருத்துவ சங்கம், தமிழ்நாடு சேப்டரின், 39வது மாநில மாநாடு வரும் 27, 28ம் தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.