/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவனை கடிக்க வந்த நாய்கள்; வீடியோ வைரல் சிறுவனை கடிக்க வந்த நாய்கள்; வீடியோ வைரல்
சிறுவனை கடிக்க வந்த நாய்கள்; வீடியோ வைரல்
சிறுவனை கடிக்க வந்த நாய்கள்; வீடியோ வைரல்
சிறுவனை கடிக்க வந்த நாய்கள்; வீடியோ வைரல்
ADDED : ஜூன் 30, 2024 02:16 AM

போத்தனூர்;போத்தனூர் அடுத்த வெள்ளலூரில் ஒரு வீட்டின் முன் நிற்கும் சிறுவன் கீழே குனிந்து ஒரு பொருளை எடுக்கிறான். தொடர்ந்து அங்கு நிற்கும் பைக்கை தாண்டிச் செல்ல முற்படுகிறான், அப்போது தெருநாய் ஒன்று சிறுவனை நோக்கி ஓடி வருகிறது. தொடர்ந்து மேலும் மூன்று நாய்கள் வருகின்றன.
இதனை கண்ட சிறுவன் அச்சமடைந்து, பைக்கினை ஒட்டி மறைந்துகொள்ள முயல்கிறான். அப்போது வீட்டினுள் இருந்து ஒருவர் ஓடி வந்து சிறுவனை தூக்குகிறார். உடனே நாய்கள் திரும்ப ஓடிவிடுகின்றன.
பார்ப்போர் நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கும், இச்சம்பவம் தொடர்பான வீடியோ பேஸ்புக்கில் ஒருவரால் பதிவு செய்யப்பட்டு, வைரலாகி உள்ளது.
சிறுவனை அந்நபர் தக்க சமயத்தில் காப்பாற்றியதால், தெருநாய்களின் கடிக்கு ஆளாகாமல் தப்பிவிட்டான். சிறிது தாமதத்திருந்தாலும் சிறுவனின் நிலை விபரீதமாகியிருக்கும்.
இனி வரும் நாட்களிலாவது, நாய்களின் எண்ணிக்கையை கூட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாகும்.