/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை அரசு மருத்துவமனை புதிய கட்டடம் முன் 'பிரீசர் பாக்ஸ்' அவசரமாக அப்புறப்படுத்திய டீன் கோவை அரசு மருத்துவமனை புதிய கட்டடம் முன் 'பிரீசர் பாக்ஸ்' அவசரமாக அப்புறப்படுத்திய டீன்
கோவை அரசு மருத்துவமனை புதிய கட்டடம் முன் 'பிரீசர் பாக்ஸ்' அவசரமாக அப்புறப்படுத்திய டீன்
கோவை அரசு மருத்துவமனை புதிய கட்டடம் முன் 'பிரீசர் பாக்ஸ்' அவசரமாக அப்புறப்படுத்திய டீன்
கோவை அரசு மருத்துவமனை புதிய கட்டடம் முன் 'பிரீசர் பாக்ஸ்' அவசரமாக அப்புறப்படுத்திய டீன்
ADDED : ஜூன் 18, 2024 12:38 AM
கோவை;புதிய கட்டடத்தின் முன் வைக்கப்பட்டு இருந்த, பிரீசர் பாக்சுகளை அரசு மருத்துவமனை டீன் அவசர அவசரமாக அப்புறப் படுத்தினார்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) ரூ.240 கோடி நிதியுதவியுடன், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், நவீன உபகரணங்களுடன் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டடத்தில், அவசர சிகிச்சை பிரிவு, குடல் மற்றும் இரைப்பை மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை துறைகள், நரம்பியல், ஒட்டுறுப்பு சிகிச்சை பிரிவு, தீக்காயப் பிரிவு ஆகிய துறைகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த புதிய கட்டடம் துவங்கப்பட்டதால், கோவை அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அந்தஸ்தை பெற்றது. ஆனால் அந்த கட்டடத்தில், சில பிரிவுகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன.
இதனால், நோயாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், அந்த புதிய கட்டடத்தின் முன் பகுதியில், சடலங்கள் வைக்கப்படும் பிரீசர் பாக்சை, தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வைத்து இருந்தனர். இதை அபசகுனமாக கருதிய, நோயாளிகளும், உறவினர்களும் முகம் சுளித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த, மருத்துவமனை டீன் நிர்மலா, மூன்றுபிரீசர் பாக்சுகளையும் அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த பிரீசர் பாக்சுகளை அப்புறப்படுத்தினர்.