/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ் ஸ்டாண்ட்டில் பெயர்ந்து விழுந்தது கான்கிரீட் பூச்சு பஸ் ஸ்டாண்ட்டில் பெயர்ந்து விழுந்தது கான்கிரீட் பூச்சு
பஸ் ஸ்டாண்ட்டில் பெயர்ந்து விழுந்தது கான்கிரீட் பூச்சு
பஸ் ஸ்டாண்ட்டில் பெயர்ந்து விழுந்தது கான்கிரீட் பூச்சு
பஸ் ஸ்டாண்ட்டில் பெயர்ந்து விழுந்தது கான்கிரீட் பூச்சு
ADDED : ஜூன் 27, 2024 10:45 PM

கோவை: கோவை காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.
கோவை நகரின் மத்தியப் பகுதியான காந்தி புரத்தில் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்ட், 1974, மே, 21ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. 50 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆங்காங்கே கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. மழைக்காலத்தில் மேல்தளத்தில் தண்ணீர் தேங்குவதால், பிளாட்பாரத்தில் ஒழுகுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், சோமனுார் பஸ் ஸ்டாண்ட்டில் காத்திருந்த பயணிகள் மீது மேற்கூரை இடிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர். அதேபோன்ற சம்பவம் கோவை சென்ட்ரல் மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட்டுகளில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட்டுகள் செயல்படுத்துவதற்கு போக்குவரத்து துறையில் மாநகராட்சி சான்று பெற வேண்டும் என்பது விதிமுறை. டவுன் பஸ் ஸ்டாண்ட்டுக்கு 'பி' சான்று, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டுக்கு 'ஏ' சான்று வழங்கப்பட்டிருக்கிறது. பொதுப்பணித்துறை மூலமாக, பஸ் ஸ்டாண்ட் கட்டுமான சுவர்களின் உறுதித்தன்மையை ஆராயாமல், மாநகராட்சி விண்ணப்பத்தை ஏற்று, 'ஏ' சான்று வழங்கியிருக்கிறது போக்குவரத்துத்துறை. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் மாநகராட்சியும், போக்குவரத்து துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.