/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போலீஸ் உட்பட இருவரின் சடலம் ஆற்றில் மீட்பு போலீஸ் உட்பட இருவரின் சடலம் ஆற்றில் மீட்பு
போலீஸ் உட்பட இருவரின் சடலம் ஆற்றில் மீட்பு
போலீஸ் உட்பட இருவரின் சடலம் ஆற்றில் மீட்பு
போலீஸ் உட்பட இருவரின் சடலம் ஆற்றில் மீட்பு
ADDED : ஜூலை 21, 2024 01:12 AM

பாலக்காடு:பாலக்காடு, அட்டப்பாடியில் காணாமல் போன போலீஸ் உட்பட இருவர் இறந்த நிலையில், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பூதயார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் முருகன், 29. அகளி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்து வந்தார்.
அவர், கடந்த 16ம் தேதி மூன்று நாள் விடுமுறையில், வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர் கிருஷ்ணன், 27, என்பவருடன் சென்றுள்ளார். ஆனால், நான்கு நாட்களாக இருவரும் வீட்டுக்கு வராமல் இருந்ததால், உறவினர்கள் நேற்று காலை புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தேடுதலில் ஈடுபட்டனர்.
வீட்டில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில், செம்பவட்டக்காடு பகுதியில் உள்ள ஆற்றில், மரத்திலும், பாறையிலும் இருவரின் உடல்கள் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரின் உடலை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பினர். இதுபற்றி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'ஆற்றை கடந்து குடியிருப்புக்கு செல்ல வேண்டும். ஆற்றை கடந்து செல்லும்போது இருவரும் நீரில் அடித்துச் சென்றிருக்கலாம்,' என்றனர்.