/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி2பி உணவு விருந்தோம்பல் கண்காட்சி இன்று துவக்கம் பி2பி உணவு விருந்தோம்பல் கண்காட்சி இன்று துவக்கம்
பி2பி உணவு விருந்தோம்பல் கண்காட்சி இன்று துவக்கம்
பி2பி உணவு விருந்தோம்பல் கண்காட்சி இன்று துவக்கம்
பி2பி உணவு விருந்தோம்பல் கண்காட்சி இன்று துவக்கம்
ADDED : ஜூலை 03, 2024 01:51 AM
கோவை;உணவு சேவை மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கான பிரத்யேக பி2பி வர்த்தகக் கண்காட்சி, இன்று முதல் வரும் 5ம் தேதி வரை, அவிநாசி ரோடு, கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடக்கிறது.
சினெர்ஜி எக்ஸ்போஷர்ஸ் சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியில், உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு, பேக்கரி, ஓட்டல், விருந்தோம்பல் சேவை நிறுவனங்களின் 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிராண்டுகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
இன்று, உணவுத் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் வணிகத்தைப் பெருக்குதல் பற்றிய கருத்தரங்கு நடக்கிறது. நாளை விருந்தோம்பல் மற்றும் சேவை வணிகக் கருத்தரங்கு நடக்கிறது. வரும் 5ம் தேதி மதியம் 2:00 மணி, 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு, அனுமதி வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு, 93420 67476 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.