/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 11:37 PM

தொண்டாமுத்தூர்:தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ -- ஜாக்) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும், வட்டார கல்வி அலுவலகங்கள் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் வட்டார கல்வி அலுவலகம் முன், டிட்டோ--ஜாக் அமைப்பினர் நேற்று, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொண்டாமுத்தூர் வட்டார தலைவர் சந்திரகுமார் தலைமை வகித்தார். டிட்டோ -- ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு முன்னிலை வகித்தார்.
அரசாணை 243யை ரத்து செய்ய வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 32 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.