/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கேபிள் டி.வி., இணைப்புகளை அதிகரிக்க தாசில்தார் அறிவுரை கேபிள் டி.வி., இணைப்புகளை அதிகரிக்க தாசில்தார் அறிவுரை
கேபிள் டி.வி., இணைப்புகளை அதிகரிக்க தாசில்தார் அறிவுரை
கேபிள் டி.வி., இணைப்புகளை அதிகரிக்க தாசில்தார் அறிவுரை
கேபிள் டி.வி., இணைப்புகளை அதிகரிக்க தாசில்தார் அறிவுரை
ADDED : ஜூன் 07, 2024 01:06 AM
போத்தனுார்;போத்தனூரில், அம்மா உணவக வளாகத்தில், சுந்தராபுரம், போத்தனுார் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுடன், தாசில்தார் தமிழ்செல்வி நேற்று சந்தித்தார், அப்போது, ''கேபிள் டிவி இணைப்புகளை அதிகரிக்க வேண்டும். நல வாரியத்தில் அனைவரும் இணையவேண்டும். எச்டி செட்டாப் பாக்ஸ்கள் விரைவில் வழங்கப்படும். மாநகராட்சி எல்லை பகுதிகளிலும் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது,''என்றார்.
அப்போது ஆப்பரேட்டர் விவேகானந்தன்,, தற்போது வரும் பெரும்பாலான 'டிவி'க்கள் எச்டி பாக்ஸ் இணைப்பு வசதியுடன்தான் வருகிறது. ஆதலால் விரைவில் எச்டி பாக்ஸ்கள் வழங்க வேண்டும். இல்லையெனில் தற்போதுள்ள இணைப்புகளின் எண்ணிக்கையும் குறையும் நிலை உள்ளது,'' என்றார்.
பதிலளித்த தாசில்தார் எச்டி பாக்ஸ்களுக்கு தொகை வசூலிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பாக்ஸ்கள் வினியோகம் செய்யப்படும், என்றார்.
ஆப்பரேட்டர்கள் கணேசன், ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றார்.