ADDED : ஜூலை 05, 2024 02:24 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பொள்ளாச்சி ஜோதிகர் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், விவேகானந்தரின், 122ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஜோதிநகர் ஆண்டாள் வீதியில் உள்ள அலுவலகத்தில், விவேகானந்தர் திருவுருவ படத்துக்கு மன்ற நிர்வாகிகள், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், மலரஞ்சலி செலுத்தினர்.
மன்ற தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார். மன்ற செயலாளர் ரகுபதி, சுவாமி விவேகானந்தரின் நினைவுகள் குறித்து விளக்கினார்.
திருக்கோவில் அறக்கட்டளையின் கவுரவ தலைவர் சங்கரவடிவேலு நன்றி கூறினார். மன்ற இணைச் செயலாளர் முருகன், பொருளாளர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* என்.ஜி.எம்., கல்லுாரி சுவாமி விவேகானந்தர் மாணவர் சிந்தனைத்திறன் சார்பாக, விவேகானந்தர் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி பொறுப்பு முதல்வர் மாணிக்கச்செழியன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் பேசினார்.
முன்னாள் முதல்வர் முத்துக்குமரன், 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற தலைப்பில், விவேகானந்தரின் கருத்துக்களை விளக்கி பேசினார். ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா நன்றி கூறினார். நிர்வாக இயக்குனர் முனுசாமி, கல்லுாரி மேலாளர் ரகுநாதன், இயக்குனர் சரவணபாபு, முதன்மையர் உமாபதி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.