/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உப்புக்கிணறு சந்தில் கண்காணிப்பு கேமரா உப்புக்கிணறு சந்தில் கண்காணிப்பு கேமரா
உப்புக்கிணறு சந்தில் கண்காணிப்பு கேமரா
உப்புக்கிணறு சந்தில் கண்காணிப்பு கேமரா
உப்புக்கிணறு சந்தில் கண்காணிப்பு கேமரா
ADDED : ஜூலை 19, 2024 10:45 PM
கோவை:கோவை, ராஜ வீதியில் உப்புக் கிணறு சந்தில், 20 கண்காணிப்பு கேமராக்களை நிறுவி, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
உப்புக் கிணறு சந்தில், 300க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. இப்பகுதியின் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திக் கொடுக்கும்படி, வியாபாரிகள் மற்றும் குடியிருப்போர் சங்கத்தினர், எம்.எல்.ஏ., வானதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற வானதி, 20 கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்து, துவக்கி வைத்தார். நிகழ்வில், சங்க செயலாளர் தங்கம் ரகூப், நிர்வாகிகள் ராஜகோபால், ஜெயகாந்தன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.