/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மண்டல தடகளப்போட்டி யில் சூலுார் ஏ.எப்.எஸ்., சாம்பியன் மண்டல தடகளப்போட்டி யில் சூலுார் ஏ.எப்.எஸ்., சாம்பியன்
மண்டல தடகளப்போட்டி யில் சூலுார் ஏ.எப்.எஸ்., சாம்பியன்
மண்டல தடகளப்போட்டி யில் சூலுார் ஏ.எப்.எஸ்., சாம்பியன்
மண்டல தடகளப்போட்டி யில் சூலுார் ஏ.எப்.எஸ்., சாம்பியன்
ADDED : ஜூலை 24, 2024 11:47 PM

கோவை : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகளப்போட்டியில், சூலுார் விமானப்படைப்பள்ளி(ஏ.எப்.எஸ்.,) ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.
கேந்திரிய வித்யாலயா சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட, பள்ளிகளுக்கு இடையேயான மாணவியர் பிரிவில், கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த தடகளப்போட்டிகள், நேற்று நிறைவு பெற்றது.
மாணவியருக்கு 14, 17, 19 ஆகிய வயது பிரிவு களில் நடத்தப்படும் போட்டியில் 38 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
100மீ., 200மீ., 400மீ., 800மீ., தடைதாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹேமர் த்ரோ உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 14 வயது பிரிவில் கோல்டன் ராக் பள்ளி 12 புள்ளிகள், 17 வயது பிரிவில் கோவை பள்ளி 18 புள்ளிகள், 19 வயது பிரிவில் ஏ.எப்.எஸ்., சூலுார் அணி 39 புள்ளிகள் எடுத்து, சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல், 56 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை, ஏ.எப்.எஸ்., சூலுார் அணியும், 38 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்று, நம்பர் 1 தாம்பரம் பள்ளி அணியும், 24 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தை, கோவை பள்ளி அணியும் பிடித்தன.