/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நடுக்குவாத நோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை நடுக்குவாத நோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை
நடுக்குவாத நோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை
நடுக்குவாத நோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை
நடுக்குவாத நோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை
ADDED : ஜூலை 22, 2024 11:58 PM

கோவை:தென்கிழக்கு ஆசியாவில் முதன் முதலாக, கோவை ராயல்கேர் மருத்துவமனை அறிமுகம் செய்த, கை, கால் நடுக்குவாத நோய்க்கான, எம்.ஆர்.ஜி.எப்.யு.எஸ்., சிகிச்சை, நுாற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு, நிரந்தர தீர்வு தந்துள்ளது.
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நரம்பியல் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மாதேஸ்வரன் கூறியதாவது:
கடந்த 50 வருடங்களுக்கு மேல் நடுக்குவாத நோய்க்கு மருந்துகள் மட்டுமே தீர்வாக அமைந்திருந்தன. அறுவை சிகிச்சை மூலம் சில நடுக்கு வாத நோய்கள் குணப்படுத்தப்பட்டாலும், பக்கவிளைவுகள் ஏற்பட்டன. எம்.ஆர்.ஐ., கைடட் அல்ட்ரா சவுண்ட் சிகிச்சையில் மிகவும் துல்லியமாகவும், பக்க விளைவுகளுமின்றி சிகிச்சையளித்து, நடுக்கு வாதத்தை முற்றிலுமாக குணப்படுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.