/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சார்-பதிவாளர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு சார்-பதிவாளர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
சார்-பதிவாளர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
சார்-பதிவாளர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
சார்-பதிவாளர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஜூன் 20, 2024 05:41 AM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி சார்-பதிவாளர் அலுவலகத்தில், சப் - கலெக்டர் திடீரென ஆய்வு செய்து, மக்களுக்கான சேவைகளை தாமதமின்றி செயல்படுத்த உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா, அவ்வபோது, அரசு துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். அவ்வகையில், நேற்று, சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் திடீர் 'விசிட்' அடித்தார்.
அப்போது, ஊழியர்களின் வருகை பதிவேட்டினை பார்வையிட்டார். மேலும், பத்திரப்பதிவு செய்யும் பதிவேடும், 'டோக்கன்' முறையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறதா எப்பதை பார்வையிட்டு விசாரித்தார்.
இதேபோல, பத்திரப்பதிவு சான்றளிக்கப்பட்ட நகல் பத்திரங்கள், வில்லங்கமில்லா சான்றிதழ் வழங்குதல், சமுதாய சங்கங்கள் பதிவு, திருமண பதிவுகள் உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
'ஆன்லைன்' வாயிலாக வில்லங்கம் இல்லா சான்றிதழ் வழங்குதல், திருமண சான்று, சமுதாய சங்கங்கள் பதிவேடு போன்றவைகளை ஆய்வு செய்தார். மக்களுக்கான சேவைகளை, எவ்வித புகாரும் எழாத வகையில், தாமதமின்றி உரிய நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டுமென, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.