/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கணித பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள் கணித பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்
கணித பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்
கணித பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்
கணித பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்
ADDED : ஜூன் 11, 2024 11:13 PM
மேட்டுப்பாளையம்:'இளநிலை கணித பட்டப் படிப்பில் சேர்வதற்கு, மாணவ மாணவியர் அதிகம் முன் வர வேண்டும். மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கணித பாடப்பிரிவில், 50 இடங்கள் காலியாக உள்ளன, என, கல்லூரி முதல்வர் கூறினார்.
மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில், 2024 -25ம் கல்வி ஆண்டுக்கான, இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன் தினம் துவங்கியது.
நேற்று இரண்டாவது நாள், காலை பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.ஏ., ஆங்கிலம், பொருளியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை ஆகிய ஐந்து பாடப்பிரிவுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. ஐந்து பாடப்பிரிவுகளில், 300 இடங்கள் உள்ளன. ஆனால், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் கானப்பிரியா கூறியதாவது: கணிதத்தில், 60 இடங்களுக்கு, 10 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். வேதியியலில், 24 இடத்திற்கு, 23 பேரும், இயற்பியலில், 24 இடங்களுக்கு, 17 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ், 60 இடங்களுக்கு, 57 மாணவ, மாணவியரும் சேர்ந்துள்ளனர்.
கணித பாடப்பிரிவில்,10 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இன்னும், 50 இடங்கள் காலியாக உள்ளன. கணித பாடத்தை படிப்பதன் வாயிலாக, அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, 12ம் தேதியிலிருந்து, 15ம் தேதி வரை நடைபெறும், கலந்தாய்வில் மாணவ, மாணவியர் பங்கேற்று, கணித பாடங்களை தேர்வு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் கூறினார்.
அன்னுார், ஜூன் 12--
அன்னுாரில் உள்ள இரண்டு மேல்நிலைப் பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி, பத்து துவக்க பள்ளிகளுக்கு, ஓராண்டுக்கான சாக்பீஸ்களை தனியார் அமைப்பினர் வழங்கினர்.
அன்னுாரில் அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு தனியார் அமைப்பினை சேர்ந்த கோபால் சுப்பிரமணியம், விஜய் பாபு ஆகியோர் இணைந்து, பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டம்பட்டி தவத்திரு சாந்தலிங்க அடிகளார் உயர்நிலைப்பள்ளி, அன்னுார் தெற்கு, நாகம்மாபுதூர், அச்சம்பாளையம், ஆகிய இடங்களில் உள்ள, 10 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு, ஒரு ஆண்டுக்கான சாக்பீஸ்களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினர்.