/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் மரியாதை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் மரியாதை
ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் மரியாதை
ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் மரியாதை
ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் மரியாதை
ADDED : ஜூலை 29, 2024 02:12 AM

கோவை:ஆர்.எஸ்.புரம், சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், கார்கில் போரின் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. கார்கில் போர் வெற்றிக்கு, நம் ராணுவ வீரர்கள் ஆற்றிய தியாகங்கள் நினைவுகூரப்பட்டன.
தொடர்ந்து, பள்ளி மாணவர் நிர்வாகக்குழுவில் இருக்கும் மாணவர்கள், தொப்பம்பட்டியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லுாரிக்கு சென்று, ராணுவ வீர்களை சந்தித்தனர்.
ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை நினைவு கூர்ந்து, உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். வீரர்களுக்கு, வாழ்த்து அட்டைகள் மற்றும் புத்தகங்களை வழங்கி கவுரவித்தனர்.