/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அத்யாயனா பள்ளியில் மாணவர் தேர்தல் அத்யாயனா பள்ளியில் மாணவர் தேர்தல்
அத்யாயனா பள்ளியில் மாணவர் தேர்தல்
அத்யாயனா பள்ளியில் மாணவர் தேர்தல்
அத்யாயனா பள்ளியில் மாணவர் தேர்தல்
ADDED : ஜூலை 25, 2024 12:12 AM

கோவை : வடவள்ளியில் உள்ள தி அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளியில், மாணவர்களுக்கு தேர்தல் நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு தலைமைப்பண்பை வளர்க்கும் விதமாக, மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பள்ளி தலைமை மாணவர், பள்ளி தலைமை மாணவி, விளையாட்டுதுறை தலைவர், கல்சுரல் தலைவர் மற்றும் அணி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளி இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஆனந்த் கிருஷ்ணன் பேசுகையில், ''ஒரு தலைவன் தன் லட்சியத்தை அடைய வேண்டுமானால் பலரை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். பதவியேற்கும் மாணவர்கள் பிற மாணவர்களை நல்வழிபடுத்தி, ஒற்றுமைப்படுத்தி லட்சியத்தை அடைய உதவ வேண்டும்,'' என்றார்.
விழாவினை, பள்ளி தாளாளர் சிவகாமசுந்தரி, துணை இயக்குனர் சவுமியா, முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.