/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விற்பனை கூடத்தில் கொப்பரை இருப்பு விற்பனை கூடத்தில் கொப்பரை இருப்பு
விற்பனை கூடத்தில் கொப்பரை இருப்பு
விற்பனை கூடத்தில் கொப்பரை இருப்பு
விற்பனை கூடத்தில் கொப்பரை இருப்பு
ADDED : ஜூலை 20, 2024 12:10 AM
நெகமம்:நெகமம் பகுதியில் கொப்பரையை கூடுதல் விலைக்கு விற்க, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நெகமம் சுற்று வட்டார பகுதிகளில், பெரும்பாலும் தென்னை சாகுபடியே அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகள் கொப்பரையை இங்குள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஆதார விலை திட்டம் மற்றும் 'இ-நாம்' வாயிலாக விற்பனை செய்து வந்தனர்.
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் இல்லாததால், 'இ - நாம்' வாயிலாக விற்பனை செய்கின்றனர். தற்போது, வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை குறைவாக உள்ளது.
மேலும், 'இ - நாம்' திட்டத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல், நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 191 டன் கொப்பரையை விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர். கொப்பரை விலை அதிகரிக்கும் போது, விவசாயிகள் விற்பனை செய்வர் என, கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.