/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில அளவில் யுவா கபடி தொடர் கற்பகம் பல்கலைக்கு இரண்டாம் பரிசு மாநில அளவில் யுவா கபடி தொடர் கற்பகம் பல்கலைக்கு இரண்டாம் பரிசு
மாநில அளவில் யுவா கபடி தொடர் கற்பகம் பல்கலைக்கு இரண்டாம் பரிசு
மாநில அளவில் யுவா கபடி தொடர் கற்பகம் பல்கலைக்கு இரண்டாம் பரிசு
மாநில அளவில் யுவா கபடி தொடர் கற்பகம் பல்கலைக்கு இரண்டாம் பரிசு
ADDED : ஜூன் 17, 2024 12:38 AM

கோவை;மாநில அளவில் நடந்த யுவா கபடி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழகம் இரண்டாம் பரிசு பெற்றது.
சென்னையில் கடந்த மே, 5ம் தேதி முதல் ஜூன், 6ம் தேதி வரை கபடி போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் தலைசிறந்த, 16க்கும் மேற்பட்ட அணிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டன. முதல் கால் இறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலை அணியினரும், சென்னை ஸ்போர்ட்ஸ் அணியும் எதிர்கொண்டது.
இதில், 34 - 23 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலை வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழகம் அணியும், பிரிஸ்ட் யுனிவர்சிட்டி தஞ்சாவூர் அணியும் மோதியது.
36 - 33 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலை வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலைக்கழகம் அணியும், வேல்ஸ் யுனிவர்சிட்டி சென்னை அணியும் எதிர்கொண்ட போது,19 - 49 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலை இரண்டாவது இடம் பிடித்தது.
இரண்டாம் இடம் பிடித்த வீரர்களுக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது. வீரர்களை கற்பகம் பல்கலை துணை வேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.