/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில கிரிக்கெட் போட்டி;திருநெல்வேலி - கோவை 'டிரா' மாநில கிரிக்கெட் போட்டி;திருநெல்வேலி - கோவை 'டிரா'
மாநில கிரிக்கெட் போட்டி;திருநெல்வேலி - கோவை 'டிரா'
மாநில கிரிக்கெட் போட்டி;திருநெல்வேலி - கோவை 'டிரா'
மாநில கிரிக்கெட் போட்டி;திருநெல்வேலி - கோவை 'டிரா'
ADDED : ஜூலை 05, 2024 12:24 AM

கோவை;மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் காலிறுதிப்போட்டி டிராவில் முடிந்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாநில அளவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது.
இதன், காலிறுதிப்போட்டி மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானத்தில் ஜூலை, 3, 4 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்ட அணிகள் போட்டியிட்டன.
'டாஸ்' வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கோவை அணியின் ராகவா கார்த்திக் (83) நிதானமாக விளையாடினர். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. இதனால், கோவை மாவட்ட அணி முதல் இன்னிங்ஸில், 78.5 ஓவர்களில் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திருநெல்வேலி அணியின் அனிஸ் சரண், ஸ்ரீதர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை துவங்கிய, திருநெல்வேலி அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற, அணியின் கேப்டன் ரேஜன் அபிநவ் (104) சதம் விளாசினார். அபிவந் கணேஷ் தன் பங்கிற்கு (51) அரைசதம் அடிக்க திருநெல்வேலி அணி 90 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் சேர்த்தது. இரண்டு நாட்கள் நடந்த போட்டி டிராவில் முடிந்ததால், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் திருநெல்வேலி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.