Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அஞ்சல்தலை கண்காட்சி லோகோ வடிவமைப்பு போட்டி

அஞ்சல்தலை கண்காட்சி லோகோ வடிவமைப்பு போட்டி

அஞ்சல்தலை கண்காட்சி லோகோ வடிவமைப்பு போட்டி

அஞ்சல்தலை கண்காட்சி லோகோ வடிவமைப்பு போட்டி

ADDED : ஆக 02, 2024 05:24 AM


Google News
கோவை : கோவை அஞ்சல் கோட்டம், முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி நவம்பர் 12, 13 ஆகிய நாட்களில் கோவை மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சிக்கு லோகோ வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் லோகோ அஞ்சல்தலை கண்காட்சிக்கு பயன்படுத்தப்படும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட லோகோ வடிவமைத்தவருக்கு கண்காட்சி நிறைவு நாளில் பரிசு வழங்கப்படும்.

இந்த லோகோ, அஞ்சல் தலை கண்காட்சியை குறிக்கும் வகையிலும், அனைவரையும் ஈர்க்கும் வகையிலும், கோவை மாவட்டத்தின் சிறப்புகளை குறிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். எந்தவித சர்ச்சைக்குரிய குறியீடுகள், மதம் சார்ந்த குறியீடுகள் பயன்படுத்தக் கூடாது.

சதுரம் அல்லது வட்ட வடிவில் 5 செ.மீ., அகலம், 5 செ.மீ., நீளம் அளவில் கணினியில் வடிவமைக்கப்பட்ட லோகோவை வரும், 7ம் தேதிக்குள் kovaipex2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வடிவமைத்தவரின் பெயர், முழு முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை அனுப்பி வைக்கவும். லோகோவில் சிறிய மாற்றம் செய்ய இந்திய அஞ்சல் துறைக்கு முழு உரிமை உண்டு.

மேலும் விவரங்களுக்கு https:// kovaipex2024.blogspot.com அல்லது என்ற 0422 2382930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us