/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருதுாரில் சிறப்பு கிராம சபை கூட்டம் மருதுாரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
மருதுாரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
மருதுாரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
மருதுாரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜூலை 23, 2024 12:07 AM
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், மருதூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் வீடுகளை பழுது பார்க்கும் திட்டங்களுக்கு நேற்று இரண்டாம் கட்டமாக சிறப்பு கிராம சபை கூட்டம், மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா தலைமை ஏற்று நடத்தினார். மக்கள் ஆர்வத்தோடு கிராம சபையில் கலந்து கொண்டு, 68 மனுக்கள் கொடுத்தனர்.
இதுகுறித்து மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா கூறுகையில், ''முதல் கட்டமாக நடந்த கூட்டத்தில் 78 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 2 பேர் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். 16 பேர் வீடுகளை பழுது பார்க்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று இத்திட்டங்களில் விடுபட்டவர்களுக்கு இராண்டாம் கட்டமாக கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் 68 பேர் மனு அளித்தனர்,''என்றார்.