ADDED : ஜூலை 27, 2024 02:02 AM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் ஆடி வெள்ளியையொட்டி நேற்று அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் காய்கறி அலங்காரத்திலும், வீரபாண்டி மாரியம்மன் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வண்ணாங் கோவில் பட்டத்தரசி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும், நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு மாரியம்மன், உருமண்டம்பாளையம் பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் உள்ள பவுர்ணமி குழு சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.