/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென் மாநில வீல்சேர் கூடைப்பந்து போட்டிகள் துவக்கம் தென் மாநில வீல்சேர் கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்
தென் மாநில வீல்சேர் கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்
தென் மாநில வீல்சேர் கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்
தென் மாநில வீல்சேர் கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்
ADDED : ஜூலை 25, 2024 11:04 PM

கோவை : தென்மாநில அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் நேற்று துவங்கியது.
பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், சிற்றுளி பவுண்டேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் ஆண்டு தென்னிந்தியா அளவிலான ஐவர் வீல்சேர் கூடைப்பந்து போட்டி ஜூலை, 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
போட்டியை ராணுவ ஆட்சேர்ப்பு அதிகாரி அன்சுல் வர்மா துவக்கி வைத்தார். இந்திய வீல்சேர் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் வருண் அலாவத் உடனிருந்தார்.
இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநில அணிகள் பங்கேற்று லீக் முறையில் போட்டியிடுகின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கின்றனர்.