/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூலுார் ஜமாபந்தியில் 94 மனுக்களுக்கு தீர்வு சூலுார் ஜமாபந்தியில் 94 மனுக்களுக்கு தீர்வு
சூலுார் ஜமாபந்தியில் 94 மனுக்களுக்கு தீர்வு
சூலுார் ஜமாபந்தியில் 94 மனுக்களுக்கு தீர்வு
சூலுார் ஜமாபந்தியில் 94 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஜூன் 28, 2024 11:33 PM
சூலுார்:சூலுார் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில், 94 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டன.
சூலுார் தாலுகாவில், கடந்த, 20ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, நான்கு உள் வட்டங்களில் உள்ள, 41வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களிடம், 1,274 மனுக்களை பெற்றார். மனுக்கள் துறை வாரியாக அனுப்பப்பட்டு பரிசீலனை செய்யும் பணி நடந்தது. அதில், முதல் கட்டமாக, 94 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்று உள்ளிட்ட உத்தரவுகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், 'மீதமுள்ள மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும், மாவட்டத்தில் வாந்தி, பேதி அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்து, தேவையான 'குளோரினேஷன்' செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை' என்றார்.