/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீட்டுக்கும், நாட்டுக்கும் சேமிப்பு தரும் சோலார் பேனல்! வங்கிக் கடனுக்கு மானியமும் உண்டு வீட்டுக்கும், நாட்டுக்கும் சேமிப்பு தரும் சோலார் பேனல்! வங்கிக் கடனுக்கு மானியமும் உண்டு
வீட்டுக்கும், நாட்டுக்கும் சேமிப்பு தரும் சோலார் பேனல்! வங்கிக் கடனுக்கு மானியமும் உண்டு
வீட்டுக்கும், நாட்டுக்கும் சேமிப்பு தரும் சோலார் பேனல்! வங்கிக் கடனுக்கு மானியமும் உண்டு
வீட்டுக்கும், நாட்டுக்கும் சேமிப்பு தரும் சோலார் பேனல்! வங்கிக் கடனுக்கு மானியமும் உண்டு
ADDED : ஜூன் 15, 2024 01:44 AM

கட்டுமானம் தொடர்பான, பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் (காட்சியா) சங்க செயலாளர் ராஜரத்தினம்.
எனது வீட்டில் இரு நாட்களுக்கு முன், ஈபி மெயின் போர்டில் தீப்பிடித்தது. இதை தடுப்பது எப்படி?
-சந்தோஷ், மசக்காளிபாளையம்.
ஒவ்வொரு ரூமிலும் தனித்தனியாக சர்க்யூட் இழுத்து, அதற்கு தனியாக MCP பயன்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, ஒரே ஒயரில் அதிகமான லோடு எடுப்பதை தவிர்க்கலாம். பயர் ரெசிஸ்டன்ஸ் ஒயர்களை பயன்படுத்துவதாலும், இதுபோன்ற விபத்துகளை தடுக்கலாம்.
எனது வீட்டில் கேமரா பொருத்த உள்ளேன். எந்த வகையான கேமரா பொருத்தலாம்?
- பிரசன்னா, செல்வபுரம்.
Dome கேமராக்களை உட்புறங்களிலும், bullet கேமராக்களை வெளிப்புறங்களிலும் பயன்படுத்தலாம். IP எனப்படும் கேமராக்களை பயன்படுத்துவதால், மிகத்துல்லியமாக பதிவுகளை கண்காணிக்க முடியும்.
போர்டிகோக்களில், 180 டிகிரி சுழலும் வயர்லெஸ் கேமராக்களை பயன்படுத்தினால் மற்ற கேமராக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், இந்த கேமராவில் இருந்து, உங்களுக்கு தேவையான பதிவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
போர்டிகோவில் பயன்படுத்தும் மற்றொரு கேமரா, இரவு, பகல் என இரு நேரமும் கலரில் தெரியும் வண்ணம் பயன்படுத்த வேண்டும். இதனால், இரவு நேரங்களிலும் தெளிவாக பார்க்க முடியும். இதன் செலவு சற்று அதிகமானாலும் பாதுகாப்பு முக்கியம் என்பதால், இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். விலை குறைவான கேமராக்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
இதற்கு தேவையான DVRகள் வாங்கும் போது, அதனுடைய மெமரி ஒரு வாரத்துக்காவது சேமிக்கும் படியான மெமரி கார்டுகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் வீடு கட்டி ஐந்து வருடங்கள் ஆகின்றன. தற்போது, சோலார் பேனல் அமைத்துக் கொள்வது அத்தியாவசியமா. எனது வீட்டின் கரென்ட் பில் 2,000 முதல் 2500 ரூபாய் வரை வருகிறது.
- ஜீவா, வெள்ளலுார்.
நீங்கள் சோலார் பேனல் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தால், உங்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் சேமிப்பை உண்டாக்குகிறீர்கள். இதற்காக தற்பொழுது வங்கிகளிலும் கடன் கிடைக்கிறது. மூன்று கிலோ வாட் வரை, 78 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
எனது வீட்டில் கார் பார்க்கிங்கில், கற்களுக்கு இடையில் புல் வைத்து பதிக்கலாம் என்று இருக்கிறேன். இவ்வாறு செய்யலாமா?
-மருதசாலம், ஒத்தக்கால் மண்டபம்.
நீங்கள் கார் பார்க்கிங் மற்றும் கேட்டுக்கு இடையில் உள்ள பகுதியில், கற்களை வைத்து புல் அமைத்துக் கொள்ளலாம்.
மெக்சிகன் புல் பயன்படுத்தினால், பராமரிப்பு பணி குறைவு. இதனால், வெளிப்புற அழகும் கூடும். முடிந்த வரை, வாகனங்கள் நிறுத்தும் இடங்களை தவிர்த்து, முன் பகுதியில் இது போன்ற தளங்களை அமைத்துக் கொள்ளலாம்.
நாங்கள் முதல் மாடியில் வசித்து வருகிறோம். காஸ் சிலிண்டரை கீழே வைத்து பைப் வாயிலாக கிச்சனுக்கு எடுத்துச் செல்லலாமா?
-முருகேஷ், செட்டிபாளையம்.
நீங்கள் தரைதளத்தில் இருந்து, காப்பர் டியூப் பயன்படுத்தி, முதல் தளத்திற்கு காஸ் கொண்டு செல்லலாம். இதற்கு முதல் தளத்திலே, வால்வு ஒன்று அமைத்துக் கொள்ளலாம். இதற்கென தனியாக ஏஜென்சிகள் இருக்கின்றன.