/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஸ்கோர்ஸில் சந்தன மரம் வெட்டி கடத்தல் ரேஸ்கோர்ஸில் சந்தன மரம் வெட்டி கடத்தல்
ரேஸ்கோர்ஸில் சந்தன மரம் வெட்டி கடத்தல்
ரேஸ்கோர்ஸில் சந்தன மரம் வெட்டி கடத்தல்
ரேஸ்கோர்ஸில் சந்தன மரம் வெட்டி கடத்தல்
ADDED : ஜூன் 12, 2024 01:29 AM

கோவை:கோவை அரசு கலைக் கல்லுாரி மாணவர் விடுதி காம்பவுண்ட் சுவரை ஒட்டி, வளர்ந்திருந்த சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லுாரி பின்புற நுழைவாயில் எதிரே, மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கும் இவ்விடுதியின் காம்பவுண்ட் சுவரையொட்டி, ஒரு சந்தன மரம் வளர்ந்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இம்மரத்தின் அடிப்பகுதியை ரம்பம் மூலம் வெட்டி மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ், போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.