/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 11.7 கிலோ கஞ்சாவுடன் ஆறு பேர் கைது; தலைமறைவான இரண்டு பேருக்கு வலை 11.7 கிலோ கஞ்சாவுடன் ஆறு பேர் கைது; தலைமறைவான இரண்டு பேருக்கு வலை
11.7 கிலோ கஞ்சாவுடன் ஆறு பேர் கைது; தலைமறைவான இரண்டு பேருக்கு வலை
11.7 கிலோ கஞ்சாவுடன் ஆறு பேர் கைது; தலைமறைவான இரண்டு பேருக்கு வலை
11.7 கிலோ கஞ்சாவுடன் ஆறு பேர் கைது; தலைமறைவான இரண்டு பேருக்கு வலை
ADDED : ஜூலை 25, 2024 12:09 AM
கோவை : நீலாம்பூர் பைபாஸ் ரோடு அருகே, 11.7 கிலோ கஞ்சா வைத்திருந்தஆறு பேரை போலீசார் கைது செய்தனர்; இருவரை தேடுகின்றனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏ.ஜி.புதுார் ரோடு சந்திப்பு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து, பேசிக்கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்களை சோதனையிட்டபோது விற்பனைக்காக, 11.7 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிரைவர்களாக பணிபுரியும் செட்டிபாளையம், அவ்வை நகரை சேர்ந்த அம்ஜத்கான்,23, சூலுார், குட்டை வீதியை சேர்ந்த ஆனந்தகுமார்,25, சேலம் எடப்பாடியை சேர்ந்த சித்தேஸ்வரன்,23, இருகூர், சிவசக்தி நகரை சேர்ந்த பிரவீன்ராஜ்,22, ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, சூலுாரில் தங்கி கூலி வேலை செய்யும் அஜித்,22, இருகூரை சேர்ந்த சுமை துாக்கும் பணியாளரான கவுதம் ஜீவா,27, என, ஆறு பேரை கைது செய்தனர்.
தலைமறைவான இருகூரை சேர்ந்த சிவக்குமார், ஒடிசாவை சேர்ந்த நபர் ஒருவரை தேடுகின்றனர்.
இவர்களிடம் இருந்து கஞ்சா, கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஆறு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.