/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொள்ளாச்சிக்கு ஆறு புது பஸ்கள் வந்தாச்சு! பொள்ளாச்சிக்கு ஆறு புது பஸ்கள் வந்தாச்சு!
பொள்ளாச்சிக்கு ஆறு புது பஸ்கள் வந்தாச்சு!
பொள்ளாச்சிக்கு ஆறு புது பஸ்கள் வந்தாச்சு!
பொள்ளாச்சிக்கு ஆறு புது பஸ்கள் வந்தாச்சு!
ADDED : ஜூலை 20, 2024 12:17 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து, சேலம் மற்றும் குருவாயூருக்கு செல்லும் பஸ்கள், புதியதாக மாற்றப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியில் இருந்து புறநகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், பழுதடைந்த பஸ்களை மாற்றி, புதிய பஸ்களை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை பராமரிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், அரசு ஆறு புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், காளியாபுரம் செல்லும் (வழித்தட எண்: 11) பஸ், சேலத்துக்கு மூன்று பஸ்கள், குருவாயூருக்கு இரண்டு பஸ்கள் என மொத்தம், ஆறு புதிய பஸ்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன, என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.