/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவாணி நீர்மட்டம் 31.45 அடியாக உயர்வு சிறுவாணி நீர்மட்டம் 31.45 அடியாக உயர்வு
சிறுவாணி நீர்மட்டம் 31.45 அடியாக உயர்வு
சிறுவாணி நீர்மட்டம் 31.45 அடியாக உயர்வு
சிறுவாணி நீர்மட்டம் 31.45 அடியாக உயர்வு
ADDED : ஜூலை 15, 2024 11:49 PM
கோவை;மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்து வரும் தொடர் மழையால், சிறுவாணி அணையின் நீர் மட்டம், 31.45 அடியாக (மொத்த உயரம் - 50 அடி) உயர்ந்திருக்கிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், சில நாட்களாக மழைப்பொழிவு காணப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 44 மி.மீ., அடிவாரத்தில் 18 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
குடிநீர் தேவைக்காக, 6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. 31.45 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருந்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
அதேநேரம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பதிவாகியிருக்கிறது. சின்னக்கல்லார் - 127, வால்பாறை - 94, சோலையாறு - 76, சின்கோனா - 52, மாக்கினாம்பட்டி - 26, ஆழியார் - 20.20, பொள்ளாச்சி - 19.40 மி.மீ., மழை பதிவானது. மேட்டுப்பாளையம், பில்லுார் அணை, கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் லேசான மழையே பதிவாகியிருக்கிறது.