ADDED : ஜூலை 19, 2024 12:09 AM
கோவை, ஜூலை 19-
தொடர் கனமழை எதிரொலியாக சிறுவாணி அணை நீர்மட்டம், 40 அடியை எட்டியது.
தென்மேற்கு பருவமழையால் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றும் கோவை நகர், புறநகர் பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது. கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணியிலும் மழை அதிகளவில் பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 47 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 87 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம், 40.54 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 7.715 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பதிவான மழை அளவு:வேளாண் பல்கலை, 19.80, பெரிய நாயக்கன்பாளையம், 1, பில்லுார் அணை, 6, கோவை தெற்கு தாலுகா, 6.80, சூலுார், 5, வாரப்பட்டி, 2, மதுக்கரை தாலுகா, 4, போத்தனுார், 4 மி.மீ., பொள்ளாச்சி, 30, மாக்கினாம்பட்டி, 32, கிணத்துக்கடவு, 7.5, ஆனைமலை, 11, ஆழியார், 15.20, சின்கோனா, 97, சின்னக்கல்லார், 152, வால்பாறை பி.ஏ.பி., 109, வால்பாறை தாலுகா, 105, சோலையாறு, 99 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.