Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறந்த மாடித்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' தருகிறது விருது கோவை, மேட்டுப்பாளையம் மக்களுக்கு அழைப்பு

சிறந்த மாடித்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' தருகிறது விருது கோவை, மேட்டுப்பாளையம் மக்களுக்கு அழைப்பு

சிறந்த மாடித்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' தருகிறது விருது கோவை, மேட்டுப்பாளையம் மக்களுக்கு அழைப்பு

சிறந்த மாடித்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' தருகிறது விருது கோவை, மேட்டுப்பாளையம் மக்களுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 16, 2024 12:05 AM


Google News
-நமது நிருபர்-

நகர்ப்புற பசுமையை ஊக்குவிக்கும் வகையில், கோவை மற்றும் மேட்டுப்பாளையம் நகரங்களில் உள்ள சிறந்த வீட்டுத்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' சார்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்பதற்காக, இடைவிடாது இயங்கி வரும் 'சிறுதுளி' அமைப்பு, நகர்ப்புறங்களில் பசுமையை அதிகப்படுத்துவதற்கு, மரம் நடுதல் மற்றும் அடர் வனம் அமைத்தல் ஆகிய பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்கள் அமைப்பதையும் ஊக்குவித்து வருகிறது.

இதற்காக, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் மக்களுக்கு 'சிறந்த வீட்டுத்தோட்டம் விருது-2024' போட்டியை, 'சிறுதுளி' அறிவித்துள்ளது.

தோட்டக்கலை மேம்பாடு மற்றும் நகர்ப்புற பசுமையை ஊக்குவிக்கும் 'தார்மிக் கார்டன்ஸ்' நிறுவனம் மற்றும் 'தினமலர்' நாளிதழ் உடன் இணைந்து, இந்த போட்டியை 'சிறுதுளி' அமைப்பு நடத்துகிறது.

கோவை நகரில் 'மாடி வனம்' எனும் திட்டத்தைத் துவக்கி, நகர்ப்புறங்களில் பசுமையை அதிகரிப்பதுடன், மக்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைக்கவும் 'சிறுதுளி' அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

வீடுகளிலேயே பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற ரசாயனங்கள் இல்லாத இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில், 'தார்மிக் கார்டன்ஸ்' நிறுவனம் உதவுகிறது.

தோட்டங்களை மேம்படுத்த தாவர பராமரிப்பு வழிமுறைகளுடன், அவற்றுக்கான விதைகள் மற்றும் நாற்றுக்களையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. கூரைகள் மற்றும் மாடிகளின் இடங்களைப் பயன்படுத்தி தாவரங்கள் மற்றும் மரங்களை வளர்ப்பதன் மூலம் நகர்ப்புற சுற்றுச்சூழலை மேம்படுத்துவதே, இந்த 'மாடிவனம்' திட்டத்தின் நோக்கம்.

இதன் ஒரு பகுதியாக, 'சிறுதுளி' அமைப்பு, தார்மிக் கார்டன்ஸ் (பி) லிமிடெட் மற்றும் 'தினமலர்' நாளிதழ் உடன் இணைந்து, 'சிறந்த வீட்டு தோட்டங்கள் விருது-2024' போட்டியை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஆய்வு செய்து, விருதுகள் மற்றும் பரிசுக்கான தோட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

கோவையில் தலா 10, மேட்டுப்பாளையத்தில் தலா ஐந்து என்ற எண்ணிக்கையில், சிறந்த வீட்டுத் தோட்ட விருதுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கு, siruthuli@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

திருச்சி ரோட்டில் கண்ணம்பாளையத்தில் 26/E என்ற இலக்கத்திலுள்ள தார்மிக் கார்டன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்திலும், பதிவு செய்யலாம்.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர், பெயர், தொடர்பு எண், இ -மெயில், தோட்டத்தின் பரப்பு, மரங்களின் எண்ணிக்கை, மரங்கள் மற்றும் தாவரங்களின் வகைகள் ஆகிய விபரங்களுடன், தோட்டத்தின் 10 போட்டோக்களுடன் விண்ணப்பங்களை, வரும் 27க்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருது வழங்கும் தேதி, பின் அறிவிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, 98946 31551, 84899 43095, 96003 14328 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us