/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷன் கடைகளில் நீடிக்கிறது பருப்பு தட்டுப்பாடு ரேஷன் கடைகளில் நீடிக்கிறது பருப்பு தட்டுப்பாடு
ரேஷன் கடைகளில் நீடிக்கிறது பருப்பு தட்டுப்பாடு
ரேஷன் கடைகளில் நீடிக்கிறது பருப்பு தட்டுப்பாடு
ரேஷன் கடைகளில் நீடிக்கிறது பருப்பு தட்டுப்பாடு
ADDED : ஜூன் 21, 2024 12:47 AM
கோவை;கோவை மாவட்டத்தில், 1,.400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 11.43 லட்சம் பயனாளிகள் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக மே, மாதத்திற்கான பருப்பு, பாமாயில் பல கார்டு தாரர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், மே மாதம் பெறாதவர்கள், இரட்டிப்பாக ஜூன் முதல் வாரம் வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.
கோவை மாவட்டத்திற்கு மாதம்தோறும் வரவேண்டிய 900 டன் பருப்பு தற்போது வரை வந்து சேரவில்லை. பாமாயிலும் 30சதவீதம் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில கடைகளில் மட்டும், மே மாத ஒதுக்கீடு ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டது. ஜூன் மாதத்திற்கான பருப்பு வழங்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் மே, ஜூன் இரண்டு மாதங்களுக்கான ஒதுக்கீடும் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால், இரண்டு மாதங்களுக்கும் சேர்ந்து பெற்றுக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது என கூறி பொது மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால், கடை ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.