/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 69வது வார்டில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு! தாகத்துக்கு தண்ணீர் குடிக்க முடியாமல் மக்கள் தவிப்பு 69வது வார்டில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு! தாகத்துக்கு தண்ணீர் குடிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
69வது வார்டில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு! தாகத்துக்கு தண்ணீர் குடிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
69வது வார்டில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு! தாகத்துக்கு தண்ணீர் குடிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
69வது வார்டில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு! தாகத்துக்கு தண்ணீர் குடிக்க முடியாமல் மக்கள் தவிப்பு

வீதியெங்கும் குப்பை
என்.ஜி.ஜி.ஓ., காலனியில், முறையாக குப்பை சேகரிக்கப்படுவதில்லை. இதனால், திறந்தவெளியில் குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது. பல இடங்களில் குப்பை குவியல்கள் காணப்படுகின்றன. குப்பையை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.
தண்ணீரின்றி தவிப்பு
சிங்காநல்லுார், உழவர் சந்தை பின்புறம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 'ஏ' விங் மற்றும் 'பி' விங் பகுதியில், உப்பு தண்ணீர் விநியோகத்திற்காக அமைக்கப்பட்ட போர்வெல் குழாய் பேனல் போர்டுகளை, சிலர் திருடிச் சென்றுவிட்டனர். 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் விநியோகம் இல்லாமல், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடும் துர்நாற்றம்
குனியமுத்துார், நரசிம்மபுரம், ஐயப்பா நகர், எட்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாரவில்லை. கால்வாயில் அதிகளவு மண் நிரம்பியுள்ளது. இதனால், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி, குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
பராமரிப்பின்றி பூங்கா
கோவை மாநகராட்சி, 51வது வார்டு, ராஜீவ் காந்தி நகரில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதால், ஆபத்தான பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். நகரில் உள்ள பூங்கா முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குப்பை, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. மழைநீரும் தேங்கி நிற்பதால், பூங்காவிற்குள் செல்ல முடியவில்லை.
தடுமாறும் வாகன ஓட்டிகள்
போத்தனுார், செட்டிபாளையம் ரோட்டில், அன்பு நகர் மற்றும் ஈஸ்வர் நகர் இடையில் சாலை பல இடங்களில் பெயர்ந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால், பைக்கில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். பெரும் விபத்துகள் நடக்கும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்.
வேகத்தடை வேண்டும்
உலியம்பாளையம், விழியிழந்தோர் பள்ளி மற்றும் நயரா பெட்ரோல் பங்க் அருகில், தினமும் சிறிய சிறிய விபத்து நடக்கிறது. குறுகலான பாதையில் அதிவேகத்தில் வாகனங்கள் வருகின்றன. பெரிய விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழும் முன், இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
புதிய கம்பம் அமைப்பது எப்போது?
வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம், பத்மாலயா லே-அவுட்டில், 'எஸ்.பி -37, பி -23' என்ற மின்கம்பம் மோசமாக சேதமடைந்திருந்தது. புகாருக்கு பின், மின்கம்பத்தை அகற்றிய மின்வாரிய பணியாளர்கள், புதிய மின்கம்பம் அமைக்கவில்லை. கடும் இருளால், குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
டெங்கு இங்கு இலவசம்
வெள்ளக்கிணறு, டாக்டர் அம்பேத்கர் வீதி, இரண்டாவது வார்டில், கழிவுகள் அடைத்து சாக்கடைக்கழிவு நீர் தேங்கி நிற்கிறது. கொசு புழுக்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
குழாய் உடைப்பு
சீரநாயக்கன்பாளையம், கருமலை செட்டிபாளையம் அருகே, 20வது வார்டில், குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் வீணாகிறது. கடந்த ஆறு மாதங்களாக, கவுன்சிலரிடம் புகார் செய்தும் நடவடிக்கையில்லை. குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
வாகன ஓட்டிகளுக்கு கடும் இடையூறு
மேட்டுப்பாளையம் ரோட்டில், கனரக வாகனங்கள் சாலையோரத்தில் பலமணி நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால், பாதசாரிகள், சைக்கிளில் செல்வோர் மற்றும் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.